search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமர்நாத் யாத்திரை"

    அமர்நாத் யாத்திரை சென்ற பீகாரை சேர்ந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    இதற்கிடையில், சாலை விபத்து மற்றும் மாரடைப்பு காரணமாக சில பக்தர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்த சேவகர்களும் இந்த ஆண்டு யாத்திரை காலத்தில் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், பீகாரை சேர்ந்த ராதா என்னும் 67 வயது பெண்மணி யாத்திரை மேற்கொள்வதற்காக பல்தால் அடிவார முகாமில் காத்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இவருடன் சேர்த்து இந்த ஆண்டின் யாத்திரை காலத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. #AmarnathYatra
    அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாண்ட்லிக் பாண்டுராஜ் என்பவர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமர்நாத் குகை கோவிலில் பனி லிங்கத்தை தரித்த சில நிமிடங்களுக்கு பிறகு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை அங்குள்ள மருத்துவ முகாமுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம், அமர்நாத் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மூன்று பேர் இன்று உயிரிழந்ததால் இந்த ஆண்டு ஆமர்நாத் யாத்திரை காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க கோட்டேஷ்வரா அமர்நாத் கோவிலில் மாரடைப்பினாலும் மகிந்தர் பால் எனும் பக்தர் யாத்திரை செல்லும் வழியிலும் இன்று உயிரிழந்தனர்.

    மேலும், யாத்ரிகர்கள் சென்ற வாகனம் ஒன்று எதிரே வந்த பள்ளி பேருந்தின் மீது மோதிய விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த சவிதா எனும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்மூலம், அமர்நாத் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் 2 பேர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #amarnathyatra
    ஸ்ரீநகர் :

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வாகனம் மூலம் யாத்திரை மேற்கொண்ட யாத்ரிகர்கள் 2 பேர் தெற்கு காஷ்மீரில் உள்ள காசிகுண்ட் எனும் இடத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழந்த கோரப் பிராட் மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம், அமர்நாத் யாத்திரையின் போது விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. #amarnathyatra
    ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க யாத்திரை செல்பவர்கள் மோசமான வானிலை காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #AmarnathYatra
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இந்த ஆண்டு தோன்றியுள்ள பனி லிங்கத்தை இதுவரை 60 ஆயிரத்து 752 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இன்னும், 27 ஆயிரத்து 426 பேர் ஜம்மு முகாமில் காத்து இருக்கின்றனர்.

    இதற்கிடையே மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் முகாமில் இருந்து நேற்று புறப்பட்ட 1798 பேரும் தற்போது உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

    வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×